சினிமா செய்திகள்

2 நடிகர் நடிகை உள்பட படப்பிடிப்பில் பங்கேற்ற 7 பேருக்கு கொரோனா + "||" + Corona for 7 people who took part in the shooting, including 2 actors and actresses

2 நடிகர் நடிகை உள்பட படப்பிடிப்பில் பங்கேற்ற 7 பேருக்கு கொரோனா

2 நடிகர் நடிகை உள்பட படப்பிடிப்பில் பங்கேற்ற 7 பேருக்கு கொரோனா
2 நடிகர் நடிகை உள்பட படப்பிடிப்பில் பங்கேற்ற 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கை தளர்த்தி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. இந்த படப்பிடிப்புகளிலும் கொரோனா பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தெலுங்கு டி.வி. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமி, நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பாஹர்வாடி நகைச்சுவை படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியானார். அதே படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இந்த நிலையில் தற்போது இந்தியில் பிரபலமான யே ரிஷ்தா கியா ஹெக்லாதா ஹய் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றவர்களும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளனர். இதன் படிப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. இதில் நடித்த சச்சின் தியாகி, சமீர் ஒன்கார், நடிகை சுவாதி சிட்னிஸ் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மூன்று பேரும் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் படக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது சின்னத்திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.