சினிமா செய்திகள்

நடிகர் ஆரவ் திருமணம்? + "||" + Actor Arav marriage?

நடிகர் ஆரவ் திருமணம்?

நடிகர் ஆரவ் திருமணம்?
ஆரவ்வுக்கும் நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
சென்னை,

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் கதாநாயகனானார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்ததாகவும் பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பானது.


இந்த நிலையில் ஆரவ்வுக்கும் நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்கள் திருமணம் அடுத்த (செப்டம்பர்) மாதம் 6-ந்தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த ஆரவ்வை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ராஹி கதாநாயகியாக நடிக்கிறார். ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.