சினிமா செய்திகள்

நடிகர் ஆரவ் திருமணம் - நடிகையை மணந்தார் + "||" + Actor Aarav marriage - married actress

நடிகர் ஆரவ் திருமணம் - நடிகையை மணந்தார்

நடிகர் ஆரவ் திருமணம் - நடிகையை மணந்தார்
ஆரவ்-ராஹி திருமணம் சென்னையில் நேற்று நடந்தது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். தொடர்ந்து சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் கதாநாயகன் ஆனார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.


நடிகர் ஆரவ்வும், நடிகை ஓவியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. மேலும், அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதுபோல் புகைப்படங்களும் வெளியாகின.

இந்த நிலையில் நடிகர் ஆரவுக்கும், நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ராஹி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆரவ்-ராஹி திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றி திருமணத்தை நடத்தினர். இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், சக்தி, சிவா, அஸ்வின், வருண், வையாபுரி, நடிகைகள் பிந்து மாதவி, சங்கீதா, சுஜா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சரண், சரவணன், விஜய் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம்?
நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2. காதலியை மணந்த நடிகர் ராகுல் ரவி
மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ரவி.
3. ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.
4. லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்?
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
5. ஒரே பாலின தம்பதியரின் திருமணத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - டெல்லி ஐகோர்ட்டு கேள்வி
2 ஒரே பாலின தம்பதியரின் விசித்திரமான வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.