சினிமா செய்திகள்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் + "||" + Will Vijay's 'Master' be released on ODT? - Director Lokesh Kanagaraj Description

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
விஜய்யின் மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்து ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் திரைக்கு வராமல் உள்ளது. தியேட்டர்களை திறக்க தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் பல படங்கள் இணைய தளமான ஓ.டி.டியில் வெளியாகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் ஓ.டி.டியில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து கோவையில் நடந்த விஜய் ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:-

“மாஸ்டர் படம் ஓ.டி.டியில் வெளியாக வாய்ப்பு இல்லை. தியேட்டரில்தான் ரிலீசாகும். படம் எப்போது திரைக்கு வரும் என்பது முடிவாகவில்லை. தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அரசிடம் பேசி வருகிறார்கள். அதில் முடிவு ஏற்பட்டு திரையரங்குகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது மாஸ்டர் படத்தை வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பு வரும். மாஸ்டர் படம் வெளியாகும் தேதியை ரசிகர்களைபோல் நானும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் நடக்கவில்லை”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மாஸ்டர்' படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் -டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை டைரக்டு செய்துள்ளார்.
2. கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்
விவசாயிகளிடம் விலைக்கு வாங்கிய கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.
3. பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது.
4. ரசிகர்களை கவர்ந்த விஜய் பட டிரெய்லர்
டிரெய்லர் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்தனர்.
5. தீபாவளி விருந்தாக தியேட்டர், ஓ.டி.டி.யில் இன்று வரும் படங்கள்
தீபாவளி விருந்தாக தியேட்டர், ஓ.டி.டி.யில் இன்று வரும் வெளியாகும் படங்கள்.