சினிமா செய்திகள்

2 நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 2 actors confirmed corona infection

2 நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

2 நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
2 நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல வங்காள நடிகர் சவுமித் சாட்டர்ஜி கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சவுமித் சாட்டர்ஜிக்கு தற்போது 85 வயது ஆகிறது. இவர் புகழ்பெற்ற டைரக்டரான சத்யஜித்ரே இயக்கத்தில் 14 படங்களில் நடித்துள்ளார். மிருணாள் சென் உள்ளிட்ட மேலும் பல பிரபல இயக்குனர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வாங்கி உள்ளார். சாட்டர்ஜியின் உடல்நிலை குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விசாரித்தார்.


இதுபோல் பிரபல தெலுங்கு நடிகர் ஹர்ஷவர்த்தன் ராணேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் நடிகை பூமிகா தயாரித்த தகிட தகிட தெலுங்கு படத்தில் அறிமுகமானார். நயன்தாராவுடன் தமிழ், தெலுங்கில் வெளியான அனாமிகா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்கு வயிற்று வலி காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம் நடிகைக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். படப்பிடிப்பில் பங்கேற்பவர்களையும் கொரோனா தாக்குகிறது.
2. துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை
துருக்கியில் இதுவாரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.
3. மத்திய பிரதேசத்தில் இன்று 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 67,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,70,707 ஆக அதிகரித்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.