சினிமா செய்திகள்

ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம் + "||" + Remo is married to Sultan film director Bhagyaraj Kannan

ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்

ரெமோ, சுல்தான் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன். இவர் இயக்குனர் அட்லியிடம் ராஜா ராணி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தி-ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் சுல்தான் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் இருதினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் வேலூர் அருகே உள்ள சேவூரில் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம்?
நயன்தாராவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2. காதலியை மணந்த நடிகர் ராகுல் ரவி
மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ரவி.
3. லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்?
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
4. ஒரே பாலின தம்பதியரின் திருமணத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - டெல்லி ஐகோர்ட்டு கேள்வி
2 ஒரே பாலின தம்பதியரின் விசித்திரமான வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5. ஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்தார் வடஇந்திய வாலிபரை கரம்பிடித்த குடகு டாக்டர்
ஓரின சேர்க்கையால் மனைவியை பிரிந்த குடகு டாக்டர், வடஇந்திய வாலிபரை திருமணம் செய்துள்ளார். இதற்கு கொடவா சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.