சினிமா செய்திகள்

2 இளம் நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷனுக்கு கொரோனா + "||" + 2 young actresses Niveda Thomas, Corona to the Courthouse

2 இளம் நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷனுக்கு கொரோனா

2 இளம் நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷனுக்கு கொரோனா
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் நடிகர் நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். தற்போது நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் நடிகர் நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். தற்போது நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நிவேதா தாமஸ் தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் வந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் முக கவசம் அணியுங்கள்'' என்று கூறியுள்ளார். கவுரி கிஷன் விஜய்சேதுபதியின் 96 படத்தில் நடித்து பிரபலமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். கவுரி கிஷன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து தேறி வருகிறேன் என்று கூறியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கடந்த 2 வாரங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார். இதுபோல் பிரபல இந்தி நடிகரும் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய்குமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 892 பேருக்கு கொரோனா; 10 பேர் பலி
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்தது.
2. மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம்
கரூரில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பலகோடி மதிப்பிலான டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
4. இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் கொரோனாவுக்கு பலி
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரான ரவிந்தர் பால் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
5. 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். 27,397 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.