சினிமா செய்திகள்

'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் நாளை வெளியாகும் - தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு + "||" + Dhanush starrer 'Karnan' to release in theaters tomorrow as planned - Producer S.Thanu

'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் நாளை வெளியாகும் - தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு

'கர்ணன்' திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் நாளை வெளியாகும் - தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு
தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
சென்னை, 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை போடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,. தமிழக மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை இன்று அறிவித்துள்ளது. 

இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2021 திரையரங்குகளில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மால்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் தனித்து இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசுழலில் மாரி செல்வராஜ் இயக்கிய நடிகர் தனுஷ் நடித்துள்ள "கர்ணன்" திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமா அல்லது தயாரிப்பாளர்கள் திரைப்பட வெளியீட்டை ஒத்திவைப்பார்களா என்று சந்தேகம் எழுத்தது. 

இந்நிலையில் 'கர்ணன்' திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், “சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று எஸ்.தாணு பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. சாதி வெறியை கருவாக கொண்ட படம் கர்ணன் - விமர்சனம்
பொடியன் குளம் என்று ஒரு குக்கிராமம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் சிற்றூர். அந்த ஊருக்கு பஸ் நிறுத்தம் கிடையாது.
3. தமிழகத்தில் நாளையும், வாக்குப்பதிவு நாளன்றும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளையும், வாக்குப்பதிவு நாளன்றும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
5. 3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை
3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை 9-ம் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.