சினிமா செய்திகள்

'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா + "||" + Corona to actress Aishwarya Lakshmi

'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா

'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனாவில் சிக்குவது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.
3. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
4. புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 790 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
5. ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை கண்காணிக்க ராணுவம் குவிப்பு
ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.