சினிமா செய்திகள்

உலகம் எங்கும் கொரோனா: விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள் + "||" + Corona all over the world: The Vijay crew hurriedly returned to Chennai

உலகம் எங்கும் கொரோனா: விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள்

உலகம் எங்கும் கொரோனா: விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள்
விஜய் இப்போது அவருடைய 65-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘விஜய் 65’ என்ற பெயரிலேயே படம் வளர்ந்து வருகிறது.
விஜய் இப்போது அவருடைய 65-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘விஜய் 65’ என்ற பெயரிலேயே படம் வளர்ந்து வருகிறது.

இதில் விஜய் ஜோடியாக பிரபல இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரே ஒரு நாள் மட்டும் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜார்ஜியா நாட்டுக்கு சென்றார்கள்.

அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால் அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள்.

விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள். வேலை முடிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உடனே சென்னை திரும்பினார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விஜய் உள்பட பட கலைஞர்கள் அனைவரும் சென்னை திரும்பினார்கள். உலகம் முழுவதும் கொரோனா பயம் இருப்பதால், ‘விஜய் 65’ படக்குழுவினர் ஜார்ஜியாவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலையில் இதுவரை 10 பேர் பலி: போலீஸ்காரர்கள் உயிரிழப்பை தடுக்க தனி நிதி ஒதுக்கீடு
கொரோனா 2-வது அலையில் இதுவரை 10 பேர் பலி: போலீஸ்காரர்கள் உயிரிழப்பை தடுக்க தனி நிதி ஒதுக்கீடு மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்.
2. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபம் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் வேன்களிலேயே நோயாளிகள் உயிர் பிரிந்தது.
3. கொரோனா பரவல் குறித்து விரிவாக விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது
கொரோனா பரவல் குறித்து விரிவாக விவாதிக்க அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.
4. கொரோனா விவகாரம்: இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
5. கொரோனா வைரஸ் தொற்று அச்சம்: ஆஸ்பத்திரியில் இருந்து தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்
கொரோனா தொற்று அச்சம், பொதுமக்கள் கூட்டம் கூடுவது போன்றவற்றைத் தவிர்க்கும்வகையில் ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆலோசனை வழங்கியுள்ளது.