சினிமா செய்திகள்

இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது + "||" + Rajinikanth's shooting is over in 2 weeks

இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது

இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனாவால் தாமதம் ஆனது.
ஊரடங்கு தளர்வில் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு மீண்டும் முடங்கியது. சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். பூந்தமல்லி அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் சில காட்சிகளை படமாக்கி விட்டு ஐதராபாத் சென்றனர். அங்குள்ள திரைப்பட நகரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் தனி விமானத்தில் கடந்த 7-ந்தேதி ஐதராபாத் சென்றார். அங்கு தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பில் கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்புகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. படக்குழுவினர் வெளியே செல்லவும் வெளிநபர்கள் படக்குழுவினரை சந்திக்கவும் தடை விதித்தனர். 

படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் 2 வாரங்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டு ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணாத்த படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது
2. கனவில் கூட நினைக்கவில்லை... எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
3. ரஜினி படத்தில் நடித்த ஷெரின்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ஷெரின், ரஜினி படத்தில் நடித்துள்ளார்.
4. ரஜினியின் ‘அண்ணாத்த' பாடல் வெளியாகிறது
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் டப்பிங் பேசி முடித்துள்ளனர்.
5. நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
அண்ணாத்த படத்தின் போஸ்டர் கொண்டாட்டத்தில் ஆட்டை வெட்டும் வீடியோ ஒன்றை வைரலாகி வருவதால் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.