விஜய்யின் 66-வது படம்


விஜய்யின் 66-வது படம்
x
தினத்தந்தி 5 May 2021 1:25 AM GMT (Updated: 2021-05-05T06:55:27+05:30)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல் வெளியான நிலையில் தயாரிப்பு தரப்புடன் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் முருகதாஸ் வெளியேற அவருக்கு பதிலாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம். ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபட்டது. ஆனால் அவர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் பட வேலைகளில் பிசியாகிவிட்டார்.

இந்த நிலையில் விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். வம்சி இயக்கிய முந்தைய தெலுங்கு படமான மகிரிஷி திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது.

Next Story