சினிமா செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் கதையில் சூர்யா + "||" + Surya in the story of Pollachi incident

பொள்ளாச்சி சம்பவம் கதையில் சூர்யா

பொள்ளாச்சி சம்பவம் கதையில் சூர்யா
சூர்யா சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40-வது படம்.
சூர்யா சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40-வது படம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது அரசு தளர்வுகள் அறிவித்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளனர். பாண்டிராஜ் படம் என்பதால் இது கிராமத்து கதையம்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக புதிய தகவல் கசிந்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.


இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்பிடித்து தண்டிக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் வருகிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்த சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது.
3. ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப்
சூர்யா நடித்து கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி தேர்வாகவில்லை.
4. கிரிக்கெட் வீரர் கதையில் சூர்யா?
கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், தோனி வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாக வந்துள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடப்பதாக தகவல் பரவி வருகிறது.
5. 3 படங்களில் சூர்யா
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைபோற்று படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் போட்டிக்கும் சென்று வந்தது.