சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை பட வியாபாரம் முடிந்தது + "||" + Ajith's strength film business is over

அஜித்தின் வலிமை பட வியாபாரம் முடிந்தது

அஜித்தின் வலிமை பட வியாபாரம் முடிந்தது
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. உலக அளவிலான தியேட்டர் உரிமை, ஓ.டி.டி. தள டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித் தோன்றும் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் அனைத்து உரிமைகளும் பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பதாக வெளியான தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக வருகிறார். எச்.வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதை படமாக்க அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் அசத்தல் வசனங்கள்.... மிரள வைக்கும் பைக் சேஸிங் - வைரலாகும் ‘வலிமை’ கிளிம்ப்ஸ்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தாஜ்மகாலில் அஜித் குமார்
நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும்போது பைக்கில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சிக்கிம் வரை பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சென்று வந்தார்.
3. மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...?
நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் பைக்கில் சென்றுவந்தார்.
4. அஜித்தின் வலிமை தீபாவளிக்கு ரிலீஸ்?
அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
5. அஜித்தின் புதிய படம்
அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடித்து வருகிறார்.