சினிமா செய்திகள்

ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு + "||" + Arya starrer 'Sarpatta Parambarai' will be released on July 22 on OTT

ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
சென்னை, 

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். காலாவிற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன், துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் ப்ரைம் இந்தியா டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஆர்யாவின் மனைவி சாயிஷா ஆகியோரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்

1. திருமண மோசடி புகார்: போலீசுக்கு நன்றி சொன்ன ஆர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
2. ‘வெப்’ தொடரில் ஆர்யா
‘வெப்’ தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் ‘வெப்’ தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
3. சாந்தனுவுக்கு ஆர்யா நடன பயிற்சி அளிப்பாரா?
பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் வாரிசு சாந்தனு, திறமையாக நடனம் ஆடுபவர்.