சினிமா செய்திகள்

விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி + "||" + Song scene starring Hindi actress with Vijay

விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி

விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்தில் புகழ் பெற்ற விஜயிடம் நடனம் ஆட பயிற்சி பெற்ற நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து தற்போது முடிந்தது. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
2. விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்
சாதி வெறிக்கு எதிராக உருவாகியுள்ள புதிய படம், ‘சாயம்.’ இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
3. விஜய் படத்தில் புதுமுக நடிகை
விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார்.
4. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.
5. விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.