சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம் சென்னையில் நடக்கிறது + "||" + Kamal Haasan-led poet Snehan wedding is taking place in Chennai

கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம் சென்னையில் நடக்கிறது

கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் திருமணம் சென்னையில் நடக்கிறது
சினிமா பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான கவிஞர் சினேகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணப்பெண்ணின் பெயர் கன்னிகா. இது பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்.
சினேகன்-கன்னிகா திருமணம் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10:45 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது.

தனது திருமணம் பற்றி கவிஞர் சினேகன் கூறியதாவது:-

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கு பேராபத்தாக இருக்கிறது. அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் என் திருமணம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு கவிஞர் சினேகன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டி கமல்ஹாசன் பேச்சு
‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் போட்டியிடும்’, என கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
2. இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? கமல்ஹாசன் விளக்கம்
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? கமல்ஹாசன் விளக்கம்.
3. சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு
சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு.
4. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்.
5. காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்.