அஜித்தின் வலிமை தீபாவளிக்கு ரிலீஸ்?


அஜித்தின் வலிமை தீபாவளிக்கு ரிலீஸ்?
x
தினத்தந்தி 18 Aug 2021 4:12 AM GMT (Updated: 2021-08-18T09:42:53+05:30)

அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு டப்பிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர்.

வலிமை படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் வலிமை படத்தில் இடம்பெற்ற, ‘நாங்க வேற மாறி’ என்று தொடங்கும் அறிமுக பாடலையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. ரசிகர்களும் வலிமை தீபாவளிக்கு வருகிறது என்று ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். வலிமை படத்தில் கியூமா குரோஷி நாயகியாக வருகிறார். வினோத் இயக்குகிறார்.

Next Story