சினிமா செய்திகள்

வீடு மாறிய கமல்ஹாசன் + "||" + Kamal Haasan who moved house

வீடு மாறிய கமல்ஹாசன்

வீடு மாறிய கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது பாரம்பரிய வீட்டில் வசித்து வந்தார்.
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது பாரம்பரிய வீட்டில் வசித்து வந்தார். பின்னர் அந்த வீட்டை கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டு சாந்தோம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஓட்டலில் ஜிம், சமையல் அறை வசதிகள் கொண்ட பெரிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார்.


தற்போது அந்த அறையில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் சென்னை போட் கிளப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் கமல்ஹாசன் குடியேறி இருக்கிறார்.

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில் வில்லனாக வருகிறார்கள். இந்த படத்தை முடித்து விட்டு இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சமந்தா பட நடிகர் கைது
பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணுடு. இவர் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஏ மாய சேசாவே மற்றும் விநாயகுடு படங்களில் நடித்து பிரபலமானார்.
2. சினிமாவில் நடிக்க தடை நீங்கியது மகிழ்ச்சி- நடிகர் வடிவேல்
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை.
3. சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால்
நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன்.
4. போதை பொருளுடன் பிரபல நடிகர் கைது
பிரபல இந்தி நடிகர் அர்மான் கோஹ்லி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். அர்மான் கோஹ்லி போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
5. கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்
கோர்ட்டு அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்.