சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி + "||" + Karthi confirms his character in Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி

பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி
இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், ‘பொன்னியின் செல்வன்.’ மணிரத்னம் டைரக்டு செய்கிறார். பிரபு, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்பட திரையுலகின் பல பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.
பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார்.

படப்பிடிப்பின்போது தன்னை மணிரத்னம் பிரத்யேகமாக கவனித்துக் கொண்டார் என்றும், தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார் என்றும் ஜெயம் ரவி டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்து மணிரத்னத்துடன் எப்போது பணிபுரியும் வாய்ப்பு வரும்? என்று எதிர்பார்க்க வைத்து விட்டார் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு கார்த்தி தனது டுவிட்டரில், ‘‘இளவரசே அத்தனை எளிதில் நீங்கள் விடை பெற்றுக்கொள்ள முடியாது. இன்னும் 6 நாட்களில் என் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும். தென்மண்டலம் வந்ததும் சந்திப்போம்...வந்தியதேவன்’’என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனது கதாபாத்திரம் வந்திய தேவன் என்பதை உறுதி செய்து இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா - கார்த்தி
முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
2. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குவிந்த முன்னணி நடிகர்கள்
கொரோனா ஊரடங்கு தளர்வில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
3. ஒரே ஸ்டூடியோவில் விஜய், கார்த்தி
விஜய், கார்த்தி ஆகியோரின் 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது.
4. வித்தியாசமான தோற்றத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி
கார்த்தி நடித்து 2019-ல் தேவ், கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்தன. கைதி வசூல் சாதனை நிகழ்த்தியது.