சினிமா செய்திகள்

"என் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளி" - வடிவேலு உருக்கம் + "||" + Actor vadivelu meet press today

"என் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளி" - வடிவேலு உருக்கம்

"என் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளி" - வடிவேலு உருக்கம்
என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு குறிப்பிட்டார்.
சென்னை,

சென்னை தியாகராய நகரில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடிவேலு கூறுகையில், எனக்கு ஏற்பட்ட துன்பம் போன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது.

கொரோனோ காலகட்டத்தில் என்னுடைய காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக சென்றுவிட்டது. முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்றது.

விவேக் என் அருமையான நண்பன், அவரது மறைவு பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.