சினிமா செய்திகள்

நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு + "||" + Actor Vimal's expensive cell phone stolen

நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு

நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு
நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது காணாமல் போனது.
சென்னை,

களவாணி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் விமல். இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் கடந்த 12-ந் தேதி அன்று சென்னை கானாத்தூர் அருகில் உள்ள பனையூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ஏராளமான ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் என்னுடன் செல்பி எடுக்க விரும்பினார்கள். அதற்கு ஒப்புக்கொண்டேன். ரசிகர்களுடன் நான் எனது செல்போனில் செல்பி எடுத்தேன். கூட்ட நெரிசலில் எனது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போய்விட்டது. யாரோ செல்போனை திருடிச் சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன். உரிய நடவடிக்கை எடுத்து செல்போனை மீட்டுத்தர வேண்டுகிறேன்.


இவ்வாறு நடிகர் விமல் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கதை திருட்டு விஷயம் தெரிந்ததும் நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா
நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. ‘ஆன்லைன்’ மூலம் வேலைக்கு விண்ணப்பித்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு
‘ஆன்லைன்’ மூலம் வேலைக்கு விண்ணப்பித்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை, செல்போன் பறிப்பு.
3. பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்க்க பெற்றோர் அனுமதிக்காததால் ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், காரில் தப்பிச்சென்றான்.
5. திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.