சினிமா செய்திகள்

சர்வதேச பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது + "||" + Karnan at the International Film Festival, Kattil Film Award

சர்வதேச பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது

சர்வதேச பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது
பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.
பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. பல தமிழ் படங்களும் போட்டியிட்டன. இதன் நிறைவு விழாவில் இரண்டு விருதுகளை தமிழ் திரைப்படங்கள் பெற்றுள்ளன. சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் படமும், சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் படமும் பெற்றன. கர்ணன் படத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. கட்டில் படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக வருகிறார். இந்த படத்துக்கு பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டில் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கர்ணன், கட்டில் படங்கள் ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலகட்டத்தில் தபால் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக பணியாற்றிய தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 89 பேருக்கு சென்னையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.
2. இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.
3. நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது 25-ந் தேதி வழங்கப்படுகிறது
நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
4. தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா
கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷாவை பிரபல இயக்குனர் சமூக வலைத் தளத்தில் பாராட்டி இருக்கிறார்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.