எனிமி படத்தின் டிரைலர் வெளியானது


எனிமி படத்தின் டிரைலர் வெளியானது
x
தினத்தந்தி 23 Oct 2021 2:37 PM GMT (Updated: 2021-10-23T20:07:46+05:30)

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரைலர் வெளியானது.

சென்னை,

நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ள படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Next Story