ரஜினிகாந்த் பட அனுபவம் குறித்து மனந்திறந்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்


ரஜினிகாந்த் பட அனுபவம் குறித்து மனந்திறந்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்
x
தினத்தந்தி 11 Nov 2021 10:58 AM GMT (Updated: 2021-11-11T16:28:55+05:30)

ரஜினிகாந்த் நடித்த முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சென்னை

மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர் ரகுமான் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கார் விருதையும் வென்று உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக உயர்ந்தார். 

கோல்டன் குளோப் விருது , பாப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளை பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமாக படப்பிடிப்பு ,தளம் இசைப்பள்ளி, மியூசிக் ஸ்டுடியோ என பல சொந்தமாக உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர்  தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், கூறி இருப்பதாவது:-

90களில் ரஜினிகாந்த  போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் பணியாற்றுயது மிக கடினமான ஒன்றாக இருந்தது. மார்ச் மாதத்தில் துவங்கப்படும்  படங்கள் அந்த வருட தீபாவளிக்கே  வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படும்.  

காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையும், பாடல்களையும் விரைவில் செய்து தரும் படி தன்னை வற்புறுத்துவார்கள் என தெரிவித்துள்ளார். அடிக்கடி பவர்கட் செய்யப்படும் ஏரியாவில் தனது ஸ்டூடியோவை வைத்திருந்த ஏ.ஆர் ரகுமான் ஜென்ரேட்டர் உதவியுடன் பல இரவுகள் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த காலங்கள் நரகம் என்று கூறிய  ஏ.ஆர்.ரகுமான் மற்ற படங்களை காட்டிலும்  ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் சில நேரங்களில் தன் மீது எரிச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story