சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாசின் 'ஜெயில்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு + "||" + Case seeking ban on GV Prakash's 'Jail'

ஜி.வி.பிரகாசின் 'ஜெயில்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு

ஜி.வி.பிரகாசின் 'ஜெயில்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ஜெயில்'. இந்த படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். நந்தன் ராம், 'பசங்க' பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. 

படத்தின் தயாரிப்பார் முதலில் படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் தற்போது திடீரென விநியோக உரிமையை வேறு நிறுவனத்திற்கு மாற்றியதாகவும் அந்த வழக்கில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளிக்குமாறு 'ஜெயில்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை கடத்தல் வழக்கு; நடிகர் திலீப்பை வரும் 27ந்தேதி வரை கைது செய்ய தடை
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் வருகிற 27ந்தேதி வரை நடிகர் திலீப்பை கைது செய்ய கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
2. பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு
பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. காணும் பொங்கல்; சென்னையில் கடற்கரை, பூங்காவில் கூட போலீசார் தடை
சென்னையில் முழு ஊரடங்கான இன்று, காணும் பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கூட போலீசார் தடை விதித்து உள்ளனர்.
4. நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்
நடிகர் விஷாலின் அடுத்த படமான மார்க் ஆண்டனி படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் இந்த கூட்டணியை எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்.
5. திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை...! மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.