சினிமா செய்திகள்

மாநாடு திரைப்படம் வெற்றி - வீடியோ வெளியிட்டு சிம்பு நன்றி + "||" + Manadu Movie Success - Simbu released the video and told thanks

மாநாடு திரைப்படம் வெற்றி - வீடியோ வெளியிட்டு சிம்பு நன்றி

மாநாடு திரைப்படம் வெற்றி - வீடியோ வெளியிட்டு சிம்பு நன்றி
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வீடியோ வெளியிட்டு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. 

இந்தப் படம் கடந்த நவம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படக்குழுவினரோடு இருக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'அனைத்து அன்பிற்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவை டைரக்டர் வெங்கட்பிரபுவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'அன்பான ரசிகர்களுக்கு, இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் - நெகிழ்ந்து பேசிய சிம்பு
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிலம்பரசன், அதன்பின் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
2. ஒமைக்ரான் எதிரொலி... ரசிகர்கள் சந்திப்பை ஒத்திவைத்த சிம்பு
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் காரணமாக ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் சிம்பு ஒத்திவைத்துள்ளார்.
3. வெற்றி வந்தவுடன் இப்படி நடந்துகொள்ள கூடாது; சிம்பு வந்திருக்க வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர் கோபம்
மாநாடு திரைப்பட வெற்றிவிழாவில் நடிகர் சிம்புவை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்து பேசியது சினிமாத்துறையினரிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
4. தயாரிப்பாளர், பைனான்சியர் மீது வழக்கு தொடருவதா? - டி. ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம்
மாநாடு திரைப்பட தயாரிப்பாளர், பைனான்சியர் மீது வழக்குத் தொடர்ந்துள்ள டி. ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. நான்கு நாட்களில் லாபம் கொடுத்த மாநாடு திரைப்படம்
மாநாடு திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் 4 நாட்களில் லாபம் அடைந்துள்ளதாக படத்தின் டைரக்டர் தெரிவித்துள்ளார்.