உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில் கூட்டணியில் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு.!!


உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில் கூட்டணியில் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு.!!
x
தினத்தந்தி 4 March 2022 3:47 PM IST (Updated: 4 March 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே மாபெரும் வெற்றியாக அமைந்த நிலையில் இரண்டாவது படத்திலேயே தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

இதன் பின்னர் இவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. பிறகு உதயநிதி ஸ்டாலின் படத்தை முடித்த பிறகுதான் துருவுடன் இணைகிறார்  என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இவரின் 3-வது திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில் உள்ளிட்டோர் இணையும் திரைப்படத்திற்கு "மாமன்னன் " என பெயர் இடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.

Next Story