நயன்தாரா மீது நடவடிக்கை..? திருப்பதி பயணத்தில் வெடித்த சர்ச்சை
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை உருவானது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயந்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் மதியம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கிருந்து சென்றுவிட்ட இருவரும் சிறிதுநேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோ ஷூட் நடத்தினர்.
அப்போது இருவரும் காலணிகள் அணிந்துகொண்டனர். இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்குமாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும்.
உடனடியாக இது குறித்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
Related Tags :
Next Story