'தங்கலான்' படத்தின் டப்பிங் பணியில் பிரிட்டிஷ் நடிகர் டேனியல்..!


தங்கலான் படத்தின் டப்பிங் பணியில் பிரிட்டிஷ் நடிகர் டேனியல்..!
x
தினத்தந்தி 17 Nov 2023 1:20 PM GMT (Updated: 30 Nov 2023 9:58 AM GMT)

'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'தங்கலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தங்கலான்' படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டாகிரோன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் அவர், தங்கலான் திரைப்படம் அற்புதமாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story