கமல் பட வதந்திக்கு டைரக்டர் விளக்கம்
கமல்ஹாசன் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படத்தை கைவிட்டுவிட்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை மகேஷ் நாராயணன் மறுத்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கமல்ஹாசன் நடித்த சில படங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே கைவிடப்பட்டு உள்ளன. இங்கிலாந்து ராணியால் தொடங்கி வைக்கப்பட்ட 'மருதநாயகம்' படப்பிடிப்பு நின்றுபோனது. 'மர்மயோகி' படத்தையும் கைவிட்டனர். 'சபாஷ் நாயுடு' படத்தை ஆரம்பித்து வெளிநாடு சென்று சில வாரங்கள் படப்பிடிப்பையும் நடத்தி, பிறகு அதுவும் நின்று போனது. இதுபோல் பிரபல மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பட வேலைகளை இதுவரை தொடங்கவில்லை. தற்போது 'இந்தியன்-2' படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் கமல்ஹாசன், அடுத்து வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரும் கமல் படத்தை இயக்க காத்து இருக்கின்றனர். இதனால் கமல்ஹாசனிடம் அடுத்த 4 வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்றும், எனவே மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படத்தை கைவிட்டுவிட்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை மகேஷ் நாராயணன் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ''கமல் படத்தை கைவிடவில்லை. அவர் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் தள்ளி வைத்து இருக்கிறோம். அந்த படங்கள் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்குவோம். இந்த படத்துக்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்" என்றார்.