வடிவேலு பாடிய கானா பாடல்
சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ‘நான் டீசன்டான ஆளு’ என்று தொடங்கும் இன்னொரு கானா பாடலையும் வடிவேலு பாடி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடித்து இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்தில் வடிவேலு சொந்த குரலில் பாடல்கள் பாடி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு படத்தில் ஆங்கில வார்த்தைகளை கலந்து வடிவேலு பாடிய அப்பாத்தா என்ற ராப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடலில் சிலரை மறைமுகமாக தாக்குவதுபோன்ற வரிகள் இருந்ததாக வலைத்தளத்தில் சர்ச்சைகள் கிளம்பி அடங்கியது. அப்பாத்தா பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார். இதே படத்தில் 'நான் டீசன்டான ஆளு' என்று தொடங்கும் இன்னொரு கானா பாடலையும் வடிவேலு பாடி இருக்கிறார். அந்த பாடலையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story