'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ..' - சுந்தரம் மாஸ்டருடன் கமல்


அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ.. - சுந்தரம் மாஸ்டருடன் கமல்
x

கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை நினைவுகூறும் வகையில் கமல்ஹாசனும், டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் ஒன்றாக ஒற்றைக்காலில் நின்றபடி போஸ் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

கமல்ஹாசனின் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் தான் அவரது குருவாக இருந்தார். அவரது வரிசையில் கமலின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ளார்

கமலின் 'பேசும் படம்' உட்பட பல பேசப்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். இவரை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் விழா எடுத்து கௌரவித்துள்ளார் கமல். சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த 'ராஜபார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய நான்கு படங்கள் தினம் ஒன்றாகத் திரையிடப்பட்டன.

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2, கல்கி, தக் லைப் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் அமரன், சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 48 போன்ற திரைப்படங்களையும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். அந்நிறுவனம் தயாரித்துள்ள "இனிமேல்" எனும் ஆல்பம் பாடலும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசனை வைத்து மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ராஜபார்வை, போன்ற படங்களை இயக்கியவர் தான் சிங்கீதம் ஸ்ரீனிவாஸ். அவரை கொண்டாடும் வகையில் அண்மையில் நடிகர் கமல்ஹாசன் "அபூர்வ சிங்கீதம்" என்கிற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் மணிரத்னம், வைரமுத்து உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் வந்திருந்தார். அப்போது நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததும் அவருடன் சேர்ந்து ஒற்றக்காலில் நின்றபடி மகிழ்ச்சி பொங்க போட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டார். கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை நினைவுகூறும் வகையில் அவர்கள் இருவரும் இவ்வாறு போஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story