மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் 15ம் தேதி வெளியாகும் 'அமீகோ கேரேஜ்' திரைப்படம்


மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் 15ம் தேதி வெளியாகும் அமீகோ கேரேஜ் திரைப்படம்
x

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அமீகோ கேரேஜ்’ திரைப்படம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அமீகோ கேரேஜ்' திரைப்படம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படம் அறிமுக விழாவில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கூறியிருப்பதாவது:-

நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன்தான்.கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில்தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான்தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாயகி ஆதிரா ராஜ் பேசும்போது, 2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீசுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம்' என்றார்.

அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் பிரண்ட் என பொருள். இது நண்பர்கள் சம்பந்தமான படம் என்று பட தயாரிப்பாளர் நாகராஜன் தெரிவித்தார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார், விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.


Next Story