'சூது கவ்வும் 2' படத்தின் புதிய அப்டேட்


சூது கவ்வும் 2 படத்தின் புதிய அப்டேட்
x
தினத்தந்தி 17 March 2024 7:04 PM GMT (Updated: 22 March 2024 8:45 AM GMT)

சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'சூது கவ்வும் 2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story