அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' பட டீசர் வெளியீடு


அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ள டபுள் டக்கர் பட டீசர் வெளியீடு
x
தினத்தந்தி 28 Feb 2024 5:46 PM GMT (Updated: 28 Feb 2024 5:56 PM GMT)

ரிலீஸ்ட் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' பட டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை,

90-ஸ், 20-ஸ் காலகட்டங்களில் வெளிவந்த ஜெய்ஹிந்த், கில்லி, தூள், ரன், சந்திரமுகி, அன்பே சிவம், இயற்கை, சுள்ளான், வில்லன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். படங்களின் வெற்றி தோல்வியை கடந்து இவரது பாடல்கள் ஹிட் அடிக்கும்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மீரா மகதி இயக்கியுள்ள இப்படத்தில் தீரஜ், ஸ்ருமிதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரின் அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கலகலப்பான டபுள் டக்கர் படத்தின் யூடியூபில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.


Next Story