அடுத்த டேட்டிங்... அவசரம் காட்டிய புதிதாக தாயான பிரபல நடிகை


அடுத்த டேட்டிங்... அவசரம் காட்டிய புதிதாக தாயான பிரபல நடிகை
x

புதிதாக தாயான பிரபல நடிகை, டேட்டிங் போவதற்கு இனியும் பொறுத்திருக்க முடியாது என இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.


மும்பை,



இந்தி திரையுலகின் பிரபல நடிகை சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான இவர், நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். இவரது கணவர் ஆனந்த் அகுஜா.

கடந்த 2018-ம் ஆண்டில் மணமுடித்த இந்த தம்பதிக்கு, கடந்த ஆகஸ்டில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். புதிதாக தாயான அவருக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

எப்போதும், ரசிகர்களை பரபரப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வமுடையவர் சோனம். இந்த சூழலில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவொன்றை வெளியிட்டு உள்ளார். அதனருகே புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.




அந்த படத்திற்கான தலைப்பாக, எங்களுக்கு இடையே நிச்சயம் நடந்த பின்னர்... வாழ்க்கை நன்றாக மாறியது என தெரிவித்து உள்ளார். அதற்கு அடுத்து, உடையை அணிந்து, மற்றொரு டேட்டிங் செல்வதற்காக இன்னும் காத்திருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் சிறந்ததே என தெரிவித்து இதய எமோஜி ஒன்றையும் அன்பின் அடையாளத்திற்காக பதிவிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்தில், நீண்ட ஸ்கர்ட் அணிந்தும், கழுத்து வரையிலான ஸ்வெட்டரும் போட்டு கொண்டு நேர்த்தியான உடையுடன் அவர் காணப்பட்டார்.


இதற்கு நடிகை சோனம் கபூரின் கணவர், அதே பதிவில் அளித்துள்ள பதிலில், இதுபற்றி உன்னுடைய பெற்றோரிடம் நான் பேசிய பின்னரே அது சரியாக இருக்கும். ரொம்ப தான் அழகு! என விமர்சன பகுதியில் தெரிவித்து உள்ளார்.

நடிகை சோனம் பதிவுக்கு அவரது தாயார் சுனிதா கபூர் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் விமர்சனம் பகுதியில் அன்பு மழையை பொழிந்து அதனை ஆமோதித்து உள்ளனர். ஷோம் மகிஜா இயக்கத்தில் நடிகை சோனம், பிளைண்ட் என்ற அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story