பிரபுதேவா, வேதிகா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


பிரபுதேவா, வேதிகா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x

‘பேட்ட ராப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்பரம் 'பேட்ட ராப்'. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், 'பேட்ட ராப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story