இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள "பாரா" பாடலின் புரோமோ வெளியீடு


இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள  பாரா பாடலின் புரோமோ வெளியீடு
x

இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது

சென்னை,

இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் "இந்தியன் 2" அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷன் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜுலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாடல் நாளை (மே 22) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த பாடலுக்கானபுரோமோ வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story