'புஷ்பா 2' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு


புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்  வெளியாகும் தேதி அறிவிப்பு
x

சமீபத்தில் வெளியான 'புஷ்பா 2 ' படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'புஷ்பா புஷ்பா' என்ற பாடல் வரும் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story