தமிழக அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு எதிர்பாரா பதில் அளித்த ரஜினிகாந்த்


தமிழக அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு எதிர்பாரா பதில் அளித்த ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 14 March 2024 1:44 PM GMT (Updated: 14 March 2024 5:31 PM GMT)

வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பா, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்தது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

இந்த நிலையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன். வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.


Next Story