தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ள 'டி-50' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு


தனுஷ் இயக்கி, நடிக்கவுள்ள டி-50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2024 1:49 PM GMT (Updated: 17 Feb 2024 1:50 PM GMT)

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார்.

சென்னை,

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில், தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.

இது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story