அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை நிறைவு செய்த 'விடாமுயற்சி' படக்குழு


அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை நிறைவு செய்த விடாமுயற்சி படக்குழு
x
தினத்தந்தி 29 Jan 2024 11:18 AM GMT (Updated: 29 Jan 2024 11:25 AM GMT)

'விடாமுயற்சி' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'விடாமுயற்சி' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு இடத்தில் விரைவில் துவங்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



Next Story