விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!


விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!
x

இன்று காலை 10.08க்கு வெளியாக இருந்த டிரைலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை 10.08க்கு வெளியாக இருந்த டிரைலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story