நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு 'யு' சான்றிதழ்


நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு யு சான்றிதழ்
x

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆப் வாரிசு' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று காலை தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 49 நிமிடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story