கேரளாவில் மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்


கேரளாவில் மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்
x

நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், தினமும் ரசிகர்களை சந்தித்து வரும் அவர், நேற்று கழுத்தில் மாலையுடன் தோன்றி, ரசிகர்களுடன் கைகுலுக்கி பூங்கொத்துக்களை வாங்கி சென்றார்.

பின்பு மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அந்த ரசிகர் முகத்தில் சிரிப்புடன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அது வைரலாகி வருகிறது.

முன்னதாக விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.


Next Story