சினிமா துளிகள்

இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா? + "||" + Can this love be a wedding?

இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா?

இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா?
இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, மூன்றாவது முறையாக ஒரு நடிகையுடன் ‘பழக’ ஆரம்பித்து இருக்கிறார்.
நடிகையின் பெயரும் மூன்றெழுத்தில்தான் இருக்கிறது. சொந்த ஊர், கேரளா. அவருடைய முகவசீகரமும், மென்மையாக பழகும் சுபாவமும் நடிகருக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம். இதேபோல் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், அந்த நடிகைக்கு ரொம்ப பிடித்து இருக்கிறதாம்.

இருவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தினமும் சந்தித்து காதல் வளர்த்து வருகிறார்களாம். இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா? என்று நெருங்கிய சகாக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்!