சினிமா துளிகள்

புன்னகையை பதிலாக தரும் நடிகை! + "||" + Actress replaces smile!

புன்னகையை பதிலாக தரும் நடிகை!

புன்னகையை பதிலாக தரும் நடிகை!
‘நம்பர்-1’ நாயகிக்கு அவர் நடித்த இரண்டெழுத்து பேய் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்து வெளிவந்த இரண்டெழுத்து படம், அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து அவர் உயர் அதிகாரியாக நடித்து வெளிவந்த மூன்றெழுத்து படம் பரபரப்பாக பேசப்பட்டது. முதலுக்கு மோசம் இல்லாத படமாக அமைந்தது. அவர் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாவு’ படத்தின் சிறப்பு காட்சிகள் காலை 6 மணிக்கே நடந்தது. (இதுபோன்ற அதிகாலை சிறப்பு காட்சிகள் பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கே நடைபெறும்.)

அதையே தனக்கு சாதகமாக்கி கொண்ட நடிகை, தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியிருக்கிறார். “இது, ரொம்ப அதிகமாச்சே...” என்று கேட்பவர்களிடம், புன்னகை ஒன்றையே பதிலாக தருகிறாராம், ‘நம்பர்-1.’