சினிமா துளிகள்

துரை செந்தில்குமார்-ராம்குமார் இயக்க சத்யஜோதி பிலிம்சின் 2 புதிய படங்களில், தனுஷ்! + "||" + 2 new films of Satyajothi Films, Dhanush!

துரை செந்தில்குமார்-ராம்குமார் இயக்க சத்யஜோதி பிலிம்சின் 2 புதிய படங்களில், தனுஷ்!

துரை செந்தில்குமார்-ராம்குமார் இயக்க சத்யஜோதி பிலிம்சின் 2 புதிய படங்களில், தனுஷ்!
மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், ஜீவா, அரிச்சந்திரா, வேடன், தொடரி உள்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், அஜித்குமார்-நயன்தாரா ஜோடி நடித்த ‘விஸ்வாசம்’ படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் 2 புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 2 படங்களிலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றி சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் கூறியதாவது:-

‘‘சத்யஜோதி பிலிம்சுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம். ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 2019, மிக சிறப்பான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அடுத்து, தரமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் 2 புதிய படங்களை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். இரண்டு படங்களிலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஒரு படத்தை துரை செந்தில்குமார் டைரக்டு செய்கிறார். இவர், ‘எதிர்நீச்சல்,’ ‘காக்கி சட்டை,’ ‘கொடி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இரண்டாவது முறையாக இவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தனுஷ் நடிப்பில் வருகிற 35-வது படம், இது. இன்னொரு படத்தை ‘ராட்சசன்’ பட டைரக்டர் ராம்குமார் டைரக்டு செய்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ், தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்கும்.’’