சினிமா துளிகள்

மீண்டும் கதாநாயகனாக காமெடி நடிகர் + "||" + Again the hero is the comedy actor

மீண்டும் கதாநாயகனாக காமெடி நடிகர்

மீண்டும் கதாநாயகனாக காமெடி நடிகர்
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகரான சவுபின் சாகிர்.
இவர் நடிப்பு, இயக்கம் என மாறி, மாறி இயங்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘பறவ’ படத்தில் நண்பரான துல்கர் சல்மானையே நடிக்க வைத்திருந்தார். இதையடுத்து அவரது தந்தை மம்முட்டியை இயக்குவதற்கு ஒரு கதை சொல்லி, அதற்கான ஒப்புதலையும் வாங்கிவிட்டார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு சவுபின் சாகிர் கதாநாயகனாக நடித்த ‘சூடாணி பிரம் நைஜீரியா’ படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் சவுபின் சாகிர். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக இருக்கும் அந்த படத்திற்கு ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பர் வெர்சன் 5.25’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் என்பவர் இயக்குகிறார்.